
‘ஈஸ்டர் தாக்குதல்கள்’ – சர்வதேச விசாரணைக்கு மைத்திரியும் ஆதரவு; ஐ.நாவுக்கும் கடிதம் அனுப்புகிறார்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
“செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் சமூகத்தில் நிலவிய பல குற்றச்சாட்டுகளுக்கு தீர்வை கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசுவேன். பலரது குற்றச்சாட்டுகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்.
செனல் 4 ஆவணப்படம் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

