
கோத்தாபய மீண்டும் வரலாம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விரும்பினால் மீண்டும் அரசியலுக்கு வர முடியும் அது அவரின் உரிமையே என்று முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.அதன்போது அவர் மேலும்கூறுகையில்,
மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும். எவருக்கும் அரசியல் செய்யும் உரிமை உள்ளது. இப்போது புதிய கட்சிகள் உருவாகின்றன. இது நல்ல விடயங்களே. இது ஜனநாயக நாடே.இங்கே புதிய கட்சிகள் உருவாக வேண்டும். வர்த்தகர்கள் அரசியலுக்குள் வர வேண்டும். அப்பா, மகன், மாமா, சித்தப்பா என்றே அரசியல் செய்கின்றனர் என்றே கூறுகின்றனர். இதனால் வர்த்தகர்கள், வியத்மக போன்ற புதியவர்கள் வர வேண்டும். இதன்படி கோத்தாபய ராஜபக்ஷவும் விரும்பினால் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடலாம் என்றார்.

