
தமிழ், சிங்கள புத்தாண்டில் சஜித் தலைமையில் அரசு
அடுத்த வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் இதில் எந்த தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் முதலில் பொதுத் தேர்தலே நடக்கவுள்ளது. அடுத்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் என்றார்.
CATEGORIES செய்திகள்

