கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் புலிகளின் சித்திரவதைக் கூடம்? முன்னாள் போராளி தகவல்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் புலிகளின் சித்திரவதைக் கூடம்? முன்னாள் போராளி தகவல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பாரிய புதைகுழி, விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட சித்திரவதைக் கூடத்தில் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் எலும்புக்கூடுகள் என முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இராணுவத்தினரிடம் கூறியதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வ தகவல் கிடைத்துள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான முகாம் எதுவும் இல்லை என்றும், அந்த இடத்தை அகழ்ந்தெடுக்கும் வரை உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த இடத்தில் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் பெயர்கள் கொண்ட ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த மனித புதைகுழி தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர், இந்த பாரிய புதைகுழியை அண்டிய இரண்டு காணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமான சித்திரவதை கூடம் ஒன்று இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த புதைகுழி தொடர்பான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபனின் அவதானத்தின் பேரில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி சி. பிரணவன், சட்டத்தரணி ரணிதா ஞானராசா, வி.கே. நிரஞ்சன், கொக்கிளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குழுவினர் அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )