தமிழர் தலைநகரில் பேரினவாதம் சண்டித்தனம் காட்ட இடமளியோம்!; சம்பந்தன் அறிவிப்பு

தமிழர் தலைநகரில் பேரினவாதம் சண்டித்தனம் காட்ட இடமளியோம்!; சம்பந்தன் அறிவிப்பு

தமிழர் தலைநகரான திருகோணமலையில் கண்ட கண்ட இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவவும் – மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது. அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது தாயகத்தின் தலைநகர் திருகோணமலை. இங்கு தமிழர்களை ஒதுக்க அல்லது இல்லாதொழிக்கச் சிங்கள – பௌத்த அடிப்படைவாதிகள் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தமிழர்கள் பெருமளவில் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் எதற்கு? சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்கள் எதற்கு? இந்த அடாவடிச் செயற்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.” – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )