நாட்டை9 துண்டுகளாகப் பிரிக்கும் ரணில் வீட்டுக்கு செல்லும் நிலை

நாட்டை9 துண்டுகளாகப் பிரிக்கும் ரணில் வீட்டுக்கு செல்லும் நிலை

நாட்டை 9 துண்டுகளாக பிரித்து சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றோருக்கு வழங்குவதற்கு இது ரணில் விக்கிரமசிங்கவின் தாய், தந்தையரின் கறுவாத்தோட்டத்திலுள்ள காணிகள் அல்ல என்று தெரிவித்துள்ள பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அதிகார பகிர்வு தொடர்பில் செயற்பட்டதால் 2004, 2019இல் நடந்த நிலைமையே மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

உதய கம்மன்பில தலைமையில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நீரிழிவு நோயாளர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு சீனியை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினாலும் அவர்கள் அதனை கேட்பதில்லை. சிலர் குடித்து குடித்து ஈரல் கரைந்து போன பின்னரும் இளநீரில் சாராயத்தை கலந்துகொண்டு வருமாறு நன்பர்களிடம் கூறுபவர்களும் உள்ளனர்.

அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தேசிய நோயொன்று உள்ளது. அதுதான் அதிகார பகிர்வு. சுமந்திரனின் முகத்தை கண்டதும் மூவுலகமும் மறந்து அவருக்கு அதிகார பகிர்வே நினைவுக்கு வரும். அவர் அதிகார பகிர்வுக்கு போனதாலேயே 2004இல் வீட்டுக்கு போக வேண்டி வந்தது. 2019 ஆம் ஆண்டிலும் அதே நிலைமையே ஏற்பட்டது. இப்போதும் அவர் அந்த இடத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றார்.

இவர் மூளையில்லாவர் அல்ல. அவர் அதிகார பகிர்வு என்பதற்கு அடிமையானவர் என்பதனால் என்ன நடக்கும் என்பதனை தெரிந்தும், அதனையே செய்கின்றார். ஆனால் இந்த நாட்டை 9 துண்டுகளாக பிரித்து சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றோருக்கு பகிர்ந்தளிக்க இது ரணில் விக்கிரமசிங்கவின் தாய், தந்தையரின் கறுவாத்தோட்ட காணிகள் அல்ல என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )