பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க தேசிய கொள்கையை வகுத்துள்ள அரசாங்கம்

பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க தேசிய கொள்கையை வகுத்துள்ள அரசாங்கம்

பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியை அளிக்கும் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் நிதிசார் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் விடயதானங்களை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் 2006ஆம் ஆண்டி 6ஆம் திகதி நிதிசார் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நிறுவனமாக இயங்குகின்ற நிதிசார் உளவறிதல் பிரிவால் பணம் தூய்த்தாக்கல் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் சட்டத்தின் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோத செயல்பாடுகளை தடுப்பதற்கான ஏற்படுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

பணத்தூத்தாக்கலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்புகளை தடுத்தற்கான சர்வதேச தரக்கட்டளைகளை தயாரிக்கின்ற சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையிலான நிதிசெயலாற்றுகை செலயணி, அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 40 பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியு்ளளது.

அதற்கமைய நிதி செயலாற்றுகைச் செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைவாக செயல்படுகிறதா என்பதை நிதிசெயலாற்றுகை செயலணியின் பிராந்திய நிறுவனமான பணம் தூய்த்தாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் வலயக் குழுவால் மதிப்பிடப்படும்.குறித்த குழுவால் மேற்கொள்ளப்படும் பரஸ்பர மதிப்பீடு 2025 மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2025 மற்றும் 2028ஆம் ஆண்டுக்குள் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )