பௌத்தம் வந்து 700 ஆண்டுகளுக்கு பின்பே சிங்கள மொழி உருவானது

பௌத்தம் வந்து 700 ஆண்டுகளுக்கு பின்பே சிங்கள மொழி உருவானது

தமிழ் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எவ்வித ஆதரவும் இல்லை எனவும் ஜனாதிபதி பதவிக்கு அவர் எந்த வகையிலும் பொருத்தமற்றவர் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே அல்லது சிறந்த தீர்வு இல்லை என்ற போதிலும் அது குறித்து கூட சஜித் பிரேமதாச எதனையும் பேசுவதில்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாது, நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என எவராவது கூறினால்,அது வெறும் மாயை.

சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உறுதியாக எதனையும் கூறாதவர்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றி பேச தயாராகி வருகிறார்.

ஜனாதிபதியின் உரை நடைபெறும் வரை தமிழ் அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பில் தென் பகுதி மக்கள் மத்தியில் பெரிய அச்சம் இருக்கின்றது.

அவர்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமைகள் எதுவும் அதில் இல்லை. இந்த நிலைமை காரணமாக நாட்டிற்குள் பல்வேறு நிலைப்பாடுகள் உருவாகி வருகின்றன.

இலங்கைக்கு பௌத்த சமயம் வந்து, 700 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கள மொழி உருவானது.

எனினும் தொல்லியல் அதிகாரிகள் பிரச்சினையை மூடி மறைப்பதற்காக வரலாற்றை கூட திரிபுப்படுத்தியுள்ளனர் எனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )