பதுங்கு குழிக்குள் இருந்து தயாரிக்கப்படவுள்ள ரணிலின் வரவு செலவுத்திட்டம்

பதுங்கு குழிக்குள் இருந்து தயாரிக்கப்படவுள்ள ரணிலின் வரவு செலவுத்திட்டம்

ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதை மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நாட்டை சர்வதேசத்திற்கு முன்னால் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக சிலர் கூறினாலும் அவர் நாட்டுக்கு முதலீடுகளையோ, முதலீட்டாளர்களையோ கொண்டு வரவில்லை.

மின்சாரம் மற்றும் குடிநீர் உட்பட அத்தியவசிய சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில் ஜனாதிபதி பதுங்குகுழிக்குள் இருந்தவாறு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க தயாராகி வருகிறார்.

பதவிக்கு வரும் போது சுயாதீன ஜனாதிபதியாக செயற்படுவேன் எனக்கூறிய ஜனாதிபதி தற்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )