
”சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்”; யாழ் இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல்
உன்னை பற்றி தவறாக சரத் வீரசேகர எம்.பி.யிடம் கூறி உன்னை தூக்குவேன்.இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ் இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பசார் வீதி , வவுனியா வை சேர்ந்த ஒருவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் பொலிஸ் நிலையத்தில் 2023/07/22 ம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நபரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபா கடனாக கொடுத்த நிலையில் அதனை தருமாறு பலமுறை கேட்டும் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
மேற்படி புகார் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணைகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்த பின்னர் வவுனியா நபர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் தனக்கு தற்போதய ற சரத் வீரசேகர எம்.பி.யுடன் தொடர்பு உள்ளதாகவும் தான் அவருக்கு என்னை பற்றி தவறாக கடிதம் ஒன்றை அனுப்பி என்னை தூக்குவேன் ,இல்லாமல் செய்து விடுவேன் என மிரட்டுகின்றார்.
மேலும் தனக்கு பல அடியாட்கள் குழு இருப்பதாகவும் அவர்களை கொண்டு வந்து என்னை கொலைசெய்து விடுவேன் என்றும் தனித்தனியாக சண்டை செய்ய வா எனக்கூறியும்
எனது சகோதரி மற்றும் தாயார் மற்றும் என்னை அசிங்கமான முறையில் ஏசி உள்ளார்.
நான் எனது தந்தையை இழந்த நிலையில் கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு எனது குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறேன்.
ஆகையால் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில் எனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் அந்த இளைஞனால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

