திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம்

திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம்

திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரஜைகள் போராட்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் தர்ஷன தந்திரகே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து கூறுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர்

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

தெற்காசியாவில் இருக்கும் இயற்கை துறைமுகம் அமைந்திருக்கும் மற்றும் மிகவும் பெறுமதியான வளங்கள் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகவே வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இந்த விடயம் பாராளுமன்றத்துக்கும் தெரியாது, அமைச்சரவைக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )