இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ரணில்..!

இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ரணில்..!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

ஹைதராபாத் இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தங்களில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )