சரத்வீரசேகர போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை

சரத்வீரசேகர போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை

வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்துக்கான தீர்வை வழங்காமல் இன்னமும் இனவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் சரத்வீரசேகர போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை என வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் சுகாதார நெருக்கடி மற்றும் வடக்கில் பாரிய புதைகுழிகள் தொடர்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம் நேற்றையதினம் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை தொடர்பாக சட்டப் பிரச்சினையை நேரில் விசாரிக்கச் சென்ற நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பாராளுமன்றத்தில் இது ஒரு பெளத்த நாடு என்பதை முல்லைத்தீவு நீதிவான் தெரிந்து கொள்ள வேண்டுமென நீதித் துறையின் சுயாதீனத்துக்கே பெரும் அச்சுறுத்தல் விடுத்த சரத்வீரசேகரவை கைது செய்ய வேண்டும்.

இந்த மாதிரி மோசமான இனவாதிகளை பாராளுமன்றத்தில் வைத்து ஆட்சி அமைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க என்ன மாதிரியான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்.

வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்துக்கான தீர்வை வழங்காமல் இன்னமும் இனவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் சரத்வீரசேகர போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )