இலங்கையில் மனித புதைகுழிகள்; உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சி; அசங்க அபேரத்ன குற்றச்சாட்டு

இலங்கையில் மனித புதைகுழிகள்; உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சி; அசங்க அபேரத்ன குற்றச்சாட்டு

இலங்கையில் கண்டுபிடிப்பட்ட மனித புதைகுழிகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் சுகாதார நெருக்கடி மற்றும் வடக்கில் பாரிய புதைகுழிகள் தொடர்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம் நேற்றையதினம் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு குழுவினர் கால்வாய் ஒன்றை தோண்டும் போது மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன், 12 புலி உறுப்பினர்கள் மற்றும் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )