
ஜனாதிபதியை கொத்த முயற்சிக்கும் ‘காகம்’; முன்னாள் அமைச்சர் மேர்வின் சிவ்வா
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்களை காக்கை குழப்ப முயற்சிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சிவ்வா தெரிவித்துள்ளார்.
களனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
சகல கட்சிகளிலும் பிடியாணை உள்ளவர்களே இருக்கின்றனர். திருட்டு, ஊழல்கள் உயர்ந்துள்ளன. எங்களுடையது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அவர்களிடம் குடும்பம் தொடர்பான எண்ணங்களே உள்ளன. மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர் அவர்களின் குடும்பத்தினர் சம்பாதிப்பதற்கும் திருட்டில் ஈடுபடுவதற்குமே வழிகளை ஏற்படுத்தினார். அதற்கு பொருத்தமான ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்தார். பஸில் ராஜபக்ஷ என்பவரே அவர். கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி பதவியை வீசிவிட்டு ஓடும் நிலைமை ஏற்பட்டது. இதனையே கர்மவினை என்று கூறுவது. எல்லோரும் மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தனர். இவர்களே மறுபிரவியில் காக்கா, நாய்களாக பிறப்பவர்கள்.
ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு காக்கை இடமளிக்காது. உங்களிடம் நான் ஒன்றை கேட்கிறேன். பார்த்துக்கொண்டிருந்தது போதும், எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் மகனாக இதோ உங்களின் ஜனாதிபதி பதவி என்று வீசிவிட்டு வாருங்கள். அப்போது நானும் உங்களுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

