70 பயணிகளுடன் கல்முனை சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து கோர விபத்து; 10 பேர் பலி; 23 பேர் வைத்தியசாலையில்..!

70 பயணிகளுடன் கல்முனை சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து கோர விபத்து; 10 பேர் பலி; 23 பேர் வைத்தியசாலையில்..!

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து கல்முனை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று3 மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.

விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )