உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும் நிலைமை ஏற்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும் நிலைமை ஏற்படும்

உள்ளூராட்சிசபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்ததற்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வரும் பட்சத்தில் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதன் மூலம் தேர்தலை மேலும் சில மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கவுள்ள நிலையில், இது தொடர்பில் நீதிமன்றம் மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கும் என பலரும் கருதுகின்றனர்.

வழக்கு விசாரணையின் போது அரசாங்கம் சார்பில் சட்டமா அதிபரும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எழுப்பிய ஆட்சேபனைகளை நிராகரிப்பதற்கு ஐவரடங்கிய அமர்வு எடுத்த தீர்மானமே அதற்கான முதல் சமிக்ஞையாக கருதப்படுகின்றது.

இதேவேளை இந்த வழக்கில் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான தீர்ப்பு வந்தால், கண்டிப்பாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் தற்போது தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் மீண்டும் வேட்புமனுக்கள் கோருவது உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கத்திற்கு சில மாதங்கள் ஆகும். தற்போதுள்ள வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதன் மூலம் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )