உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டி கட்சியை காப்பாற்ற அரசின் புதிய தந்திரம்

உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டி கட்சியை காப்பாற்ற அரசின் புதிய தந்திரம்

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக உள்ளூராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியமையால் அதனை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கே பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் வகித்தவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளமையால் அவற்றை சீர் செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில் தற்போது அவை ககைக்கப்பட்டுள்ளமையால் முன்னாள் உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதில் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பத்தரமுல்லவில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட போதும், வாகனங்கள் மற்றும் எரிபொருள் இல்லையென்பதை காரணம் காட்டி பலரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு கட்சி முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகவே அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவால், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்குவதற்கான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமன்ன உறுதிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )