
ரணில் வீட்டிற்கு தீ வைப்பு ; சிவில் செயற்பாட்டாளர் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பியத் நிகேஷல கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

