
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த மோடிக்கு ரணில் அழுத்தம் கொடுக்க வேண்டும்
வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையினால் யாழ்.மாவட்ட மீன வர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்றவாரம் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்ட நான்கு இந்திய படகுகள் கைது செய்யப்பட்ட நிலை யில் அதிலிருந்த சுமார் இருபது பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் 400 மேற்பட்ட எல்லை தாண்டிய படகுகள் எமது கடற்பரப்புக்குள் வரும்போது நான்கு படகுகளை மட்டும் பிடித்தால் போதாது.
எதிர்வரும் மாதம் இந்தியா செல்லவுள்ள எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
குறித்த சந்திப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடி க்கை எடுக்க வேண்டுமென அழுத்திக் கூற வேண்டும்.
ஏனெனில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் எமது கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக் கப்படுவதுடன் எமது கடல் வளங்களும் அழிக்கப்படுகிறது.
ஆகவே நமது நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்ற ஜனாதிபதி எமது மக்களின் தேவை களை படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலையில்
மீனவ சமூகங்களின் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

