கோத்தபாயவுக்கு நடந்ததை ரணிலுக்கு நடக்க விடோம்

கோத்தபாயவுக்கு நடந்ததை ரணிலுக்கு நடக்க விடோம்

அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு நேர்ந்ததை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பளை மாவட்டத் தொகுதி கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

விசித்திரக் கதைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான் நாடும் கிராமமும் முன்னேறின. கிராமத்து இளைஞனுக்கும் யுவதிக்கும் அப்போது தான் வேலை கிடைத்தது. நன்றியுணர்வை அறிந்த நீங்கள் அதை நினைவில் கொள்வீர்கள்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. இது வெறும் நேர விரயம். அவரது 60, 70 பேர் கொண்ட குழு நாளை மறுதினம் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமர்ந்திருக்கும். அவர் தனது சக ஊழியர்களை கூட வைத்திருக்க முடியாது.

பேஸ்புக் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பரிசுத்தத் தன்மை என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே கடந்த காலங்களில் ஜே.வி.பி. கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இன்று எமது சந்திப்பிற்கு வந்துள்ளனர்.

இன்று நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும்.எந்த தேர்தலிலும் கிராமம் தோறும் சென்று கட்சியை பலப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச் செய்வோம்.

தற்போதைய ஜனாதிபதிக்கு இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள நாம் வழங்கி வருகின்றோம். கோத்தபாய ராஜபக்ஸவுக்கு நேர்ந்ததை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நடக்க அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் பிரச்சினை அல்ல, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அதனால் தேர்தல் காலத்தில் அரசியல் செய்வோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )