எல்லாவல மேதானந்த தேரரின் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எல்லாவல மேதானந்த தேரரின் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எல்லாவல மேதானந்த தேரர், மேற்கொண்டுவரும் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாறு கசப்பானதாக இருந்தாலும் கி.பி. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி இலங்கைக்கு வந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை மாற்றி, பின்னர் அதனடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளை கையகப்படுத்த முனைவது ஆக்கிரமிப்பு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவேஇந்த விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )