கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியின் முதல் வைத்தியர் கடமைகளை பொறுப்பேற்றார்

கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியின் முதல் வைத்தியர் கடமைகளை பொறுப்பேற்றார்

கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரி வரலாற்றில், அந்த பாடசாலையில் கல்வி கற்ற முதல் வைத்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஹர்ஷி, வைத்தியராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரி, யுத்த காலத்தின்போது விரும்பத்தகாத நினைவுகளை கொண்டிருந்தது.

எனினும், 2009ம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தற்போது இந்த பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் சிறந்த நிலையில் உள்ளனர்.

அந்த வகையில், கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் பயின்ற ஹர்ஷி என்பவர் வைத்தியர் என்ற நிலையை அடைந்து, கடந்த சனிக்கிழமை வைத்திய தொழிலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )