ஊடகங்களை ஒடுக்கி ஜனாதிபதித் தேர்தல்; ரணில் முயல்வதாக கூறுகிறார் அனுர

ஊடகங்களை ஒடுக்கி ஜனாதிபதித் தேர்தல்; ரணில் முயல்வதாக கூறுகிறார் அனுர

ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில் ,

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறி ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த நாட்டில் தேர்தலை ஒத்திவைத்து, ஊடகங்களை அடக்கிவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகின்றார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இத்தொகுதி மாநாட்டில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய, கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )