கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு நே்நைய தினம் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )