
இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்; கஜேந்திரகுமாருக்காக குரல் கொடுத்தார் சிறீதரன்
இராணுவ புலனாய்வாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் சபையில் நேற்று(06) கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தன்னுடைய இனம் சார்ந்து, மக்கள் சார்ந்து பேசுகின்ற ஒரு பிரதிநிதி இராணுவ புலனாய்வாளர்களால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகமா? சட்டமா? நீதியா என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளே கடந்த காலங்களிலும் இடம்பெற்றிருந்தன என்று அவர் தெரிவித்தார்.

