
அரசுக்கு எதிரான கட்சிகளுக்கு உதவும் வெளிநாடுகள்
இலங்கையில் நடந்த போராட்டத்திற்கு அரசசார்பற்ற நிறுவனங்களே பணத்தை செலவிட்டதாகவும் புத்த பகவானை அவமதிக்கும் சம்பவங்களின் பின்னணிலும் இந்த நிறுவனங்கள் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உண்மையான போராட்டகார்கள் தற்போது இல்லை. உண்மையான போராட்டகாரர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டனர். பணத்திற்கு பின்னால் செல்பவர்களே தற்போது போராட்டத்தில் உள்ளனர்.
இவர்களே அரசசார்பற்ற நிறுவனங்களுடன் போராட்டத்தின் பின்னணியில் இருக்கின்றனர்.
போராட்டம் நடந்த இடத்தில் சிலர் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், வேறு வேலைகளையும் செய்தனர்.
அரசியலும் அதில் சம்பந்தப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
புத்த பகவானை அவமதிக்கின்றனர். இதனை இன்னுமொரு அணி பணத்திற்காக செய்கிறது.
நாட்டில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இது சர்வதேச சூழ்ச்சித்திட்டம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சவினருக்கு உதவினால், மிக விரைவாக விரட்டப்படுவார்.
இது புற்றுநோய் போன்றது. பணத்திற்கு பின்னால் சென்றவர்கள் தற்போது கட்சிகளுக்கு சென்றுள்ளனர்.
தனிஸ் அலி எமது கட்சியுடன் இருப்பதாக கூறுகின்றனர். அவரது எமது கட்சியில் இல்லை.
அவர் கட்சியின் தலைமையகத்திற்கும் வந்ததில்லை. இப்படியானவர்களே தற்போது போராட்டத்தின் தலைவர்கள்.
இவர்களை போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்தால், எம்மை போல தெரிவார்கள்.
முதலில் இவர்களை விரட்ட வேண்டும். நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்த வெளிநாட்டு அணிகளே ஆலோசனை வழங்கின.
சில கட்சிகளுக்கு சர்வதேச நாடுகள் உதவுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கே வெளிநாடுகள் உதவுகின்றன எனவும் குமார வெல்கம கூறியுள்ளார்.

