
தோழா!!
தோழா!
விதி என்பது இதுதானா?
நேற்றுவரை ஓடிய உன் கால்கள்,
இன்று சக்கர நாற்காலியில்.
பயப்படாதே….
துவண்டு போகாதே!
துணிந்து நில்!!
சிறு உளி ஒரு மலையை
செதுக்கும் வலிமை உள்ளது!
உன் உள்ளம் உயர்வானது!
உன் எண்ணங்கள்
உயர்வானவை!!
எழுவாய்!! மிக விரைவில்!!
துயரினை தூர வை.
மனிதமற்ற செயலாலே
வாழ்க்கை சக்கர நாற்காலியில்…
மனமுடைந்து முடங்காதே..
துணிவோடு எதிர்த்து போராடு.
வானமும் உன் வசப்படும்.
நிலையில்லா மனித வாழ்வு.
நிம்மதியை இழக்காதே.
அறிவோடு செயல்படு.
அகிலத்தை வென்றிடுவாய்!!
மன ஊனமாக
வாழ்வதை விட
வலுவிழந்து வாழ்தல்
சிறப்பே!!
வலுவிழந்தோர் பலர்
சாதனை புரிந்தவர்கள்..
சரித்திரத்தில் வாழ்கிறார்கள்!
நாளைய விடியல் உனக்கானது..!!
கைகளில் வலுவுண்டு
கண்ணீரைத் துடைத்து விடு!
மனத்துணிவோடு
வாழ்வில் எதிர் நீச்சலடி!!
நிச்சயம்…!!
வெற்றி மகள்
உன்னிடம் சரணடைவாள்!
தோழா!
உன் விடியல்
உன் கண்ணெதிரே
நம்பிக்கையோடு
அழைக்கிறது.
சென்று வா!
வென்று வா!!
–கலை