
கோபம்
இந்தப் பிரபஞ்சத்தின் மீதான
என் கோபம்
என்னை
ஊழித்தாண்டவம் ஆட
வைக்கிறது
பேதையென
பெண்களை
இழிவாக எண்ணி
மேனி நடுங்க வைக்கும்
அற்ப பதர்கள்மீது
அழியாக் கோபம் கொண்டு
ஆடிடும் ஊழித்தாண்டவம்
இது.
பெண்ணாக
பிறந்ததினால் பட்ட
சோதனை வேதனைகள்
ஆயிரம்!
அத்தனை தடைகளையும்
தாண்டி வந்தால்
அதற்கும் ஒரு பெயர்….
எத்தனை துன்பங்கள்?
சொல்லிட மொழியில்லை….
கேட்டிட இங்கு எவரும்
ராமனுமில்லை…
ஜாதி என்ற பெயரில்,
தீண்டதகாதவர் என்ற பெயரில்…..
மமதை கொண்டு
எண்ணிலடங்கா
பாலியல் வன்கொடுமை
உலகெங்கிலும்
நடைபெறுகின்ற
கொடுமை
ஊழித்தாண்டவம் ஆடிடும்
என் காலில் சலங்கை சத்தம்
இரத்த வெறிபிடித்த
அற்ப பதர்களை
அழித்திடும் வரையில்
பரதமாடும் என் கால்கள்
ஓயப் போவதில்லை
என் ஊழித்தாண்டவ தீயில்
உலகம் எரிந்து சாம்பாலாகட்டும்.
மீண்டும் ஒரு புனித உலகம் உதயமாகட்டும்.
பெண்மையை போற்றி
தாய்மையை மதிக்கும்
பொற்காலம் உதயமாகட்டும்.
அதுவரை சலங்கை கட்டிய
என் கால்கள் ஓயப் போவதில்லை!
-அம்முக்குட்டி