
நடாஷாவின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளது
பௌத்த மதத்தை தாக்க அமெரிக்காவினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவர்தான் “நடாஷா”. அவர் ஒரு அப்பாவி அல்ல என்று உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புத்த மதத்திற்கு மதம் மாறிய “நடாஷா” என்பவர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பின் திட்டத்தில் பணிபுரிந்தவர். மேலும் அவர் புத்த மதத்திற்கு மாறத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவர். புத்த மதத்திற்கு மாறுவதற்கான இந்த நடவடிக்கை அப்பாவித் தனமானது அல்ல.நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை பொரளையிலுள்ள ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தர லங்கா கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விமல் வீரவன்ச பதிலளித்தார்.
கேள்வி: பௌத்த மதத்தை அவமதித்ததன் பின்னணியில் அரசாங்கம் உள்ளதா? சர்வதேச சக்திகள் உள்ளனவா?
பதில்: நடாஷா என்பரைத் தானே கூறுகிறீர்களா? அவர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான திட்டத்தில் பணிபுரிந்தார். கூடுதலாக, அவர் யு.எஸ்.எயிட் அமைப்பில்(USAID) பணியாற்றினார்.
தற்போது இவர்கள் பௌத்தத்தை தாக்குகின்றனர். இவர்கள் சும்மா வருவதில்லை. இவையெல்லாம் திட்டமிட்டு கட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டவை. இது ஒரு அப்பாவி நடவடிக்கை அல்ல. நாட்டில் பௌத்த மதத்துக்கு எதிரான அவமதிப்புகள் நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. அத்தகைய பாத்திரங்கள் “சுத்தோதனன் மகன்” என்று அழைக்கப்படுகின்றன
புத்த மதத்திற்கு மதம் மாறிய “நடாஷா” என்பவர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பின் திட்டத்தில் பணிபுரிந்தவர். மேலும் அவர் புத்த மதத்திற்கு மாறத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவர். புத்த மதத்திற்கு மாறுவதற்கான இந்த நடவடிக்கை அப்பாவித் தனமானது அல்ல.நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் தற்போது பௌத்தத்தை தாக்குகின்றனர். இவர்களின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளது எனவும் தெரிவித்தார்.