மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும்

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும்

நாட்டில் மதப்பிரச்சினைகளை தூண்டிவிட்டு, நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயற்சித்து வருதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைகாலமாக முகங்கொடுத்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான தெளிவான அறிகுறிகள் தற்சமயம் காணக்கூடியதாக உள்ளது.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமைதியை சீர்குழைக்க பல தரப்பினர் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆரோக்கியமான சமூகமொன்றுக்கு மத ஸ்த்திரதன்மையை பேணுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

தனி நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ மதவாத உணர்வுகளை தூண்டுவதற்கு அல்லது அதே நோக்கத்துடன் செயல்பட முயற்சித்தால் அவர்களுக்கெதிராக, அரசியலமைப்பின் 9 ஆம் சரத்து மற்றம் தண்டனைச்சட்டத்தின் 291இன் பிரகாரம் கடுமையான சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் அமைச்சர் மெலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )