தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்திய மத்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த விஜயம் அமையவுள்ளது என்று தெரியவருகின்றது.

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம் என வலியுறுத்தி வரும் கூட்டமைப்பு, இதற்கு முன்னரும் டில்லி செல்ல முற்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றன. எனினும் பயணம் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே தற்போது டில்லி செல்வதற்குக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது எனத் தெரியவருகின்றது.

டில்லிப் பயணத்தின் போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )