வயிற்றுப் பிழைப்புக்காக நாட்டை விட்டு செல்லும் மக்கள்

வயிற்றுப் பிழைப்புக்காக நாட்டை விட்டு செல்லும் மக்கள்

நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்திய அரசாங்கம் பணத்தை விரயமாக்கி வரும் அதேவேளை வயிற்றுப்பிழைப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாட்டை கைவிட்டு செல்லதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இராணுவ கண்காட்சி ஒன்றை நடத்த தயாராகி வருகிறது.

கண்காட்சி பொருளாதாரத்தில் இருக்கும் எமது நாட்டில் மக்கள் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக நாட்டை விட்டு செல்கின்றனர்.

துயரம் நிறைந்த மக்களின் இந்த வாழ்கையை மாற்ற வேண்டும். குறுகிய காலம் வாழும் மனிதர்களின் சுதந்திரமான மனநிலையுடன் கூடிய நாட்டை உருவாக்கும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ரணில் விக்ரமசிங்க ஒளிரும் பொருளாதாரத்தை உருவாக்குவதாக கூறி கண்காட்சிகளை நடத்துகிறார்.

புத்தாண்டு வைபவம், பொசோன் வைபவம் மாத்திரமின்றி ஆகஸ்டம் மாதம் இராணுவ கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தொழில்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு 13 ஆயிரமாக குறைந்தது. எனினும் 2022 ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண் வேலைகளுக்காக 74 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

பயிற்சிகளை பெறாத தொழிலாளர்களாக ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

பயிற்சிகளை பெறாத மற்றும் வீட்டுப் பணிப்பெண்களாக சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

போர் அகதிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இலங்கை தற்போது இருப்பவர்கள் பொருளாதார அகதிகள்.

அவர்கள் நாட்டை விட்டு செல்ல அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியிலேயே ரணில் விக்ரமசிங்க கண்காட்சி பொருளாதாரத்தை உருவகித்து காட்டுகிறார்.

இப்படியான நிலைமையில் இலங்கையில் விசேடமான அரசியல் நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கையில் சமூக மாற்றத்தை எதிர்பார்த்து மிகப் பெரிய மக்கள் அமைப்பை தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பியுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )