பாராளுமன்றத்துக்கு இவ் வருடம் தேர்தல் ?

பாராளுமன்றத்துக்கு இவ் வருடம் தேர்தல் ?

இந்த வருடத்திற்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அரசியல் தகவலொன்று தெரிவிக்கின்றது.

முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமிடப்படுவதாகவே கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மாதங்களில் எவ்வேளையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம் என்றும், அதற்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடலாம் என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )