இரகசியமாக நாட்டிற்கு வந்த பசில்

இரகசியமாக நாட்டிற்கு வந்த பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். கடந்த மே மாதம் 7ம் திகதி பசில் ராஜபக்ச டுபாய் சென்ற நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி நாடு திரும்பியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கான முக்கிய வாக்கெடுப்பும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதற்கான வாக்கெடுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )