ரணிலின் சாதனையை முறியடித்த ஜீவன்;  ரணிலே தெரிவித்தார்

ரணிலின் சாதனையை முறியடித்த ஜீவன்;  ரணிலே தெரிவித்தார்

இளம் அமைச்சராக நான் சில பணிகளை நிறைவுசெய்தேன் இந்தச் சாதனையை தற்போது என்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,

2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கபீர் ஹாசீம் அமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. நான் செய்த ஒரு சாதனையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். இளம் அமைச்சராக நான் சில பணிகளை நிறைவுசெய்தேன் இந்தச் சாதனையை தற்போது என்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் அதற்கு முன்னர் நான்தான் அந்த சாதனைக்கு உரிமையாளனாக இருந்தேன். இளம் தலைமுறையினர் இவ்வாறு சாதனைகளை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )