இந்திய பெருங்கடலில் சீனாவின் அழுத்தம்; நியூயோர்க்கில் கூடும் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம்

இந்திய பெருங்கடலில் சீனாவின் அழுத்தம்; நியூயோர்க்கில் கூடும் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நாடாளுமன்றத்தின் 9வது கூட்டம் இன்றும் நாளையும் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவது உள்ளிட்ட 4 விடயங்களை விவாதத்திற்கு எடுக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நாடாளுமன்றத்தின் 9வது கூட்டம் இன்றும் நாளையும் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் போது உலக தமிழர்களின் பங்களிப்பு,சர்வஜன வாக்கெடுப்பு,மக்கள் அமைப்புக்கு இணக்கத்தை வெளியிடுவது மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவது ஆகிய தலைமைப்புகள் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அவற்றின் ஆலோசனைக்குழுக்கள் இந்த விவாதங்களில் கலந்துக்கொள்ள உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர இந்த கூட்டங்களின் போாது பல தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதுடன் அமைச்சரவையின் அறிக்கை மாத்திரமல்லாது வரவு செலவும் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

கூட்டத்தில் பிரதான உரையை போகன்விலே சுயாட்சி பிராந்தியத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜேம்ஸ் டெனிஸ் ஆற்றவுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற விவாதங்களை உலக தமிழ் சமூகம் நேரடியாக பார்வையிடவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தடை செய்தது. அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அடங்கும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் இணக்கப்பாடுகள் 1373 கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் 316 அமைப்புகள் உள்ளடக்கப்பட்டன. அதிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அடங்கும்.

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிக்க செய்த பின்னர், தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வெளியில் சர்வதேச உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது.

இது விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான முன்னணி அமைப்பு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடையை நீக்குமாறு கோரி, இந்திய உள்துறை அமைச்சுக்கு மனு ஒன்றை அனுப்பியது.

எனினும் இந்திய ஒன்றிய அரசாங்கம் அதனை நிராகரித்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )