
தனி அரசு வராது கூட்டு அரசே வரும்
தற்போதைய அரசியல் நிலவரப்படி எதிர்வரும் தேர்தல்களில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்போம் என்று இரண்டு பக்கத்திலும் கூறப்படுகின்றது. அடிக்கடி நாங்களும் இதனையே கூறுகின்றோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கொடியை தூக்கியது. இதன்படி உண்மையான சர்வகட்சி அமைக்கப்பட்டு, ஊழல், ஊழல்வாதிகள் இல்லாத நேர்மையான அரசியல்வாதிகளை தெரிவு செய்து சென்றாலே நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியும்.
இன்றைய அரசியல் நிலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் தனியாக அரசியல் கட்சியொன்றுக்கு அரசாங்கத்தை அமைக்க முடியாது. இதனால் கட்சிகள், அமைப்புகள் இணைந்த அரசாங்கத்தையே அமைக்க முடியும் என்றார்.

