
மே-18 நினைவேந்தல் கூட்டாக நடத்துவோம்; தனித்துச் செயற்பட இடமில்லை என உறுதி
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் எவரும் தனித்துச் செயற்பட முடியாது. ஒருமித்த நினைவேந்தல் நிகழ்வே முன்னெடுக்கப்பட வேண்டும். நினைவேந்தலில் குழப்பவாதிகளுக்கு இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
தமிழர் தாயகத்தில் போராளிகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்புகள் அமைதியாக இருக்கும் நிலையில் சுயலாப அரசியலுக்காக சில தரப்பினர் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கின்றனர்.
திலீபனின் நினைவேந்தல் , அன்னை பூபதியின் நினைவேந்தல் போன்றவற்றில் குழப்பங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் ரணில் ராஜபக்சவின் நரித் தந்திரத்தை புரியாமல் தமிழ்த் தலைவர்கள் தனியாகச் செயற்படக் கூடாது. ஒருமித்து நினைவேந்தல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

