பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக பாரிய எதிர்கட்சிக் கூட்டணிக்குத் தயார்

பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக பாரிய எதிர்கட்சிக் கூட்டணிக்குத் தயார்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக ஒன்றுபட்டு செயற்படுவதற்கு முன்வந்திருக்கும் பாராளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் , எதிர ணியிலுள்ள சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளன.

இது தொடர்பானஊடக கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சிதலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் எதிரணி அரசியல் தலைவர்கள் ,ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் கொழும்பு ,கொள்ளுப் பிடியிலுள்ள மாண்டரின் ஹோட்டலில் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சரும் ஐக்கியம க்கள் சக்தி எம். பி . யுமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் கலந்துரையாடல் தொடர்பான அறிமுக உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய , எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,சர்வதேச பத்திரிகைசுதந்திரதினத்திலான சந்திப்பை நினைவு கூர்ந்ததுடன் நாட்டின் தற்போதைய பேசுபொருளாகியுள்ள உத்தேச பயங்கரவாத எ திர்ப்புச்சட்டமானது ஊடகங்களை கட்டுப்படுத்தும் அறிக்கையிடலை தணிக்கை செய்யும் ஏற்பாடுகளைஅதிகளவு கொண்டிருப்பது தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார் . அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தில் அரசாங்கத்தின் நடவடிகைகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் விபரித்தார்

நாட்டில் ஜன நாயகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் , பொறுப்புக்கூற லையும் ஏற்படுத்துவ தற்காக வெவ்வேறு கொள்கைகள் , கோட்பாடுகளை கொண்டிருக்கின்றபோதிலும் எதிர்க்கட்சிகள் பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகள் தொடர்பாக ஒன் றிணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

பேராசிரியர் பீரிஸ்

எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழப்பீட்டுச் செயன்முறைகள் தொடர்பில் ஆராய விசேட பாராளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியதுடன் இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரவும், எந்த விவரமும் மறைக்கப்படுவதைத் தடுக்கவும் இதுவே சிறந்த மற்றும் பாரபட்சமற்ற முறையாகுமென்றும்இது துரித கதியில் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது தொடர்பான பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருக்கும்பேராசியர் பீரிஸ் . தற்போதைய சூழ்நிலையில் உண்மையைக் கண்டறிய குழுவொன்றை அமைப்பது ஏனைய விடயங்களை விட முக்கியமான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

கடல்சார் அனர்த்தம் தொடர்பான இழப்பீட்டுச் செயன்முறை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இலங்கையின் அந்நியச் செலாவணியின் தீவிரத் தேவையைக் கருத்தில் கொண்டு, நட்டஈட்டைப் பெறுவதில் நாட்டை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான அலட்சியம் மற்றும் தாமதம் நாட்டுக்கு இழைக்கப்படும் பாரிய பாவமாகும்.

எக்ஸ்பிரஸ் உரிமையாளர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை நாட்டுக்கு வெளிப்படுத்துவது மத்திய வங்கி யின் வீரசிங்கவின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் தொகையைவிட இரண்டு மடங்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

அத்துடன் இலங்கை வம்சாவளியை சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இந்த இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டினில் பணமோசடிதொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்பதையும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் , ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக இலங்கைக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் நஷ்டம் ஏற்படும் வகையில்சிங்கப்பூரில் வழக்குத் தொடர ஏன் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார் .

இதேவேளை இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கி ம் ,ஐக்கியமக்கள்சக்தி எம்.பிக்கள் .ரஞ்சித மத் துமபண்டார, முஜிபூர் ரகுமான் ,மற்றும் கெ விந்து குமாரதுங்க எம். பி . உட்பட பலர் கலந்துகொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )