வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை

வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன் மதகுருமார்கள், அரசியற் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )