அடுத்த ஆட்சி சஜித் தலைமையில் தான் மலரப் போகின்றது

அடுத்த ஆட்சி சஜித் தலைமையில் தான் மலரப் போகின்றது

“ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அடுத்த ஆட்சி சஜித் பிரேமதாஸ தலைமையில் தான் மலரப் போகின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இந்நிலையில், சஜித் பக்கத்திலிருந்து எவரும் அரசு பக்கம் செல்லமாட்டார்கள்.

ஐக்கிய மக்கள் சக்திக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொய்யான செய்திகளை அரச தரப்பினர் வெளியிடுகின்றனர். எனினும், எமது மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள்.

எந்தத் தேர்தல் நடந்தாலும் மக்கள் ஆணை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கே கிடைக்கும். அதனால்தான் இந்த அரசு தேர்தலை நடத்தாமல் காலத்தைக் கடத்துகின்றது.” – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )