பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மோசமான சட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மோசமான சட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நடைமுறைக்கு வருமானால் முள்ளைப்பிடுங்கிவிட்டு ஆப்படித்த நிலைமையே ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சட்டம் மிக மோசமான சட்டம்,மனித உரிமைகளை மீறக்கூடிய சட்டம். பயங்கரவாத தடுப்புச்சட்டம் ஊடாக தமிழ் மக்கள் படுமோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அதனைவிட மோசமான சட்டம் வருகின்றபோது நாங்கள் வெள்ளம் வருவதற்கு முன்பாக அணைகோல்வது போன்று இந்த சட்டத்தினை எதிர்க்க வேண்டும். அதற்காக நாளை 25 ஆம் திகதி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இந்த சட்டத்தினை எதிர்ப்பதாக காட்டுவதற்குரிய செயற்பாடுகளை செய்ய வேண்டும்.

வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் முடங்கும் வகையில் எங்களது எதிர்ப்பினை காட்டவேண்டும். நாங்கள் அந்த எதிர்ப்பினை காட்டாவிட்டால் நாங்கள் அந்த சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்களாகயிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )