பொதுஜன பெரமுனவிற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் பீரிஸ்

பொதுஜன பெரமுனவிற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் பீரிஸ்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபை கூட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அந்தக் கட்சியின் தவிசாளரான எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி கட்சியின் செயலாளரான சாகர காரியவசம், ஜீ.எல்.பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச்சபை கூட்டம் சட்டப்பூர்வமற்றது என்றும், அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது தொடர்பில் தான் முறையாக நீதிமன்றத்தை நாடி அந்தக் கூட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )