மட்டக்களப்பில் இரு பிரேத சபைகள் தமிழரசுக் கட்சி வசமானது!

மட்டக்களப்பில் இரு பிரேத சபைகள் தமிழரசுக் கட்சி வசமானது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 3 சபைகளிற்கான புதிய தவிசாளர் தேர்வு நேற்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய தவிசாளர்களது கட்சிகள் தவிசாளர் பதவியை இழந்து எதிரணிகள் சார்பில் தவிசாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

நாவிதன்வெளி தமிழ் அரசுக் கட்சியிடம் இருந்து 2020இல் பறிபோன நிலையில் மீண்டும் தமிழ் அரசுக் கட்சி வசமாகியுள்ளது.

இதேநேரம் இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வசமிருந்த வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் அரசுக் கட்சியின் ரட்ணம் நிசான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று முஸ்லீம் காங்கிரஸ் வசமிருந்த ஏறாவூர் பிரதேச சபை அமிர் அலியின் ஆதரவாளர்கள் வசமாகியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )