13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்

13 ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்

மாகாணசபைத் தேர்தல் முக்கியம் – டில்லி வலியுறுத்தல்

இந்தியாவுக்கு வருகை தருமாறு ரணிலுக்கு மோடி அழைப்பு

இனநெருக்கடிக்கு அதிகார பகிர்வினூடாக அரசியல் தீர்வை கண்டு கொள்ளும் முயற்சியாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தவேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது முக்கியமெனவும் புது டில்லி மீண்டும் கொழும்பிடம் வலியுறுத்தியுள்ளது .

இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் , வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது ,அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் அவரது எண்ணப்பா டு குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம் விளக்கியதாகவும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் இவ்விட யத்தில் முக்கியமானவை என்ற இந்தியாவின் கவனத்திற்கொள்ளப்பட்ட கருத்தை தான் அவருடன் பகிர்ந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் நல்லிணக்கத்தை நோக்கிய நீடித்த முயற்சிகள் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரிவினரின் நலன்களுக்கான தாகுமெனவும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைபற்றியும் தான் ஜனாதிபதியுடன் பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தி ருக்கிறார் .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் முன்னிலையில் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார் .

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது ;

முதலில் மீண்டும் கொழும்புக்கு வருகைதந்தமை எவ்வளவுக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லிவிடுகிறேன். இன்று என்னை வரவேற்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றிகூறுகிறேன் . வியாழன் மாலை இலங்கைவெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் சந்தித்து நாங்கள் சிறப்பான கலந்துரையாடலை நடத்தியுள்ளோம்.

இந்த இக்கட்டான தருணங்களில் இலங்கைக்கு இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இந்த நேரத்தில் கொழும்புக்கு வருவதன் முதன்மையான நோக்கமாகும் . நீங்கள் அனைவரும் அறிந்தது போல், கடந்த ஆண்டு, இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உதவுவதற்காக இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொ லர்களை கடன்கள் மற்றும்நிதி ஏற்பாடுகளை நீடித்தல் அடிப்படையில் நீடித்தது. எங்களைப் பொறுத்தவரை, இது ‘அயலவர்க்கு கு முதலில்’ மற்றும் ஒரு பங்காளியை அவர்களே தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டுமென விட்டுவிடாததாகும் .

இந்த வருடம் கவலையை ஏற்படுத்தத் தொடங்கிய ஒரு சூழ்நிலையில், அதே உணர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது . இலங்கைக்கு கடன் வழங்குபவர்கள் நாடு மீட்பதற்கு வசதியாக சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக கருதினோம் மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல், சரியானது என்று நாங்கள் நம்புவதைச் செய்ய இந்தியாமுடிவு செய்தது. இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கினோம். இது இலங்கையின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது மட்டுமன்றி அனைத்து இருதரப்பு கடன் வழங்குனர்களும் சமமாக கையாளப்படுவதை உறுதிசெய்யும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதனை செய்யும் போது, இலங்கையின் பாதையானது அதிக முதலீடுகளால் உந்தப்பட்ட வலுவான பொருளாதார மீட்சியில் ஒன்றாகும் என்பதையும் நாம் அறிவோம். இங்கேயும், நான் வர்த்தக சமூகத்துடன் பகிர்ந்து கொள்வேன் என்ற தெளிவான செய்தி உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில், குறிப்பாக சக்தி , சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் அதிக முதலீடுகளை இந்தியா ஊக்குவிக்கும். ஒரு சக்திவாய்ந்த ஈர்த்துக்கொள்ளும் காரணியை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மிகவும்நட்பு ரீதியான வர்த்தக சூழலை வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நிலைமையின் தீவிரத்தை இங்குள்ள கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

சக் தி பாதுகாப்பென்பது இன்று இலங்கையின் மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகும். தீர்வுகளுக்கான தேடல் அவசியமாக பாரிய பகுதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இலங்கைக்கு முழுமையான பலன் கிடைக்கும். இந்த நாடு மகத்தான மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலைக் கொண்டுள்ளது, அது நிலையான வருவாய் ஆதாரமாக மாறும். திருகோணமலை சக்திதுறையில் கேந்திரமாக மேலெழும் திறனையும் கொண்டுள்ளது. இலங்கைக்கான ஆதரவில், இந்தியா அத்தகைய முயற்சிகளில் நம்பகமான பங்காளியாக இருக்க தயாராக உள்ளது. இந்த ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பிற்கு இன்று கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளோம்.

சுற்றுலா, இலங்கை பொருளாதாரத்தின் உயிர் நாடியாகவுள்ளது . இந்திய சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதன் மூலம் மிகவும் நடைமுறைசாத்தியமான முறையில் இலங்கைக்கான தங்களின் சாதகமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர் என்பதை நான் கவனித்திருக்கி றேன் . ஆனால் இதை நிலையானதாக மாற்ற இன்னும் பல படிகள் உள்ளன. எனவே தொடர்பாடலை வலுப்படுத்துவதும் பயணத்தை மேம்படுத்துவதும் நம் அனைவருக்கும் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். நிச்சயமாக, இந்திய சுற்றுலாப் பயணிகளை இந்திய பல் தேசியநிதி சேவை யில்[ரூபே ]செலுத்தவும், ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவை [ யூ பி ஐ]ப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பது இந்த விட யத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

கொந்தளிப்பான உலகில், இந்தியாவும் இலங்கையும் தங்கள் வர்த்தகத்தை நிலையாக வைத்திருப்பது அவசியம். வர்த்தகத்திற்கு ரூபாயில் கொடுப்பனவுகளைப் பயன்படுத்துவது வெளிப்படையாகஎ மது பரஸ்பர நலனா க உள்ளது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் அவரது எண்ணப்பா டு குறித்து ஜனாதிபதி என்னிடம் விளக்கினார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் இவ்விட யத்தில் முக்கியமானவை என்ற எங்களின் கவனத்திற்கொள்ளப்பட்ட கருத்தை நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன். நல்லிணக்கத்தை நோக்கிய நீடித்த முயற்சிகள் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரிவினரின் நலன்களுக்கான தாகும் . இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைபற்றியும் நான் பேசினேன்.

இலங்கையின் வலுவான மீட்சிக்கு எங்களுடையபங்குடைமை எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, விரைவில் இந்தியாவுக்கு வருகைதரு மாறுபிரதமர் நரேந்திர மோடிவிடுத்துள்ள அழைப்பை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், நான் கையளித்துள் ளேன் .

என்னை வரவேற்றதற்காக மீண்டும் ஒருமுறை ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன். இந்தியா ஒரு நம்பகமான அயல் நாடு, நம்பகமான பங்குதாரர், இலங்கையின் தேவையை உணரும்போது அதிக தூர ம் செல்வதற்கு தயாராக இருக்கும் நாடு என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இன்று நான் இங்கு வந்திருப்பது பிரதமர் மோடியின் ‘அயலவர் முதலில்’ என்ற உறுதிப்பாட்டினாலாகும் . தேவைப்படும் இந்த தருணத்தில் இலங்கைக்கு நாங்கள் துணை நிற்போம், இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளோம்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )