உள்ளூராட்சி தேர்தலில் விக்கி – மணி கூட்டு

உள்ளூராட்சி தேர்தலில் விக்கி – மணி கூட்டு

உள்ளூராட்சி தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணி – மற்றும் மணிவண்ணன் தலைமையிலான அணி இணைந்து வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசிய பின்னர், இருவரும் இணைந்து கூட்டாகப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டனர்.

மணிவண்ணன் அணியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைத் தோ்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்தக் கூட்டணியில் ரெலோ, புளொட் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்துகொள்ள முடியும் என செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? என்பது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதற்கிடையே நீங்கள் கூட்டமைப்புடன் இணையலாம் என முன்னர் பேசப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புடன் ஏன் இணையவில்லை? என மணிவண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், யாழ். மாநகர சபையில் எங்களுடன் கூட்டமைப்பினர் ஒத்துழைத்துச் செயற்படவில்லை. ஈ.பி.டி.பியுடன் இணைந்து அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடித்து முதல்வர் பதவி விலக சதி செய்தனர். இவ்வாறானவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )