
தமிழரசு கட்சியில் புதிய மாற்றம்; உப தலைவர் சாணக்கியனா?
இலங்கை தமிழரசு கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.
அவர் நாளைய தினம் கட்சியில் நடக்கவுள்ள கூட்டத்தின் போது இது குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
இதன்படி அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொருத்தமாக இருப்பார் என தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழுவும் இளைஞர் அணியும் அதனை சார்ந்த இளைஞர்கள் உட்பட அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

