2024 வரை ரணிலே ஜனாதிபதி;  பாராளுமன்றமும் 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்

2024 வரை ரணிலே ஜனாதிபதி; பாராளுமன்றமும் 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார் எனவும், பாராளுமன்றம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி 2024 வரை இருப்பார், அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது.  அதேபோல் பாராளுமன்றமும் 2025 வரை இருக்கும்.அதற்கும் அதற்கு முன்னர் தேர்தல் நடைபெறாது. உள்ளூராட்சி சபைகள் இருந்தால் பிரச்சினை இல்லை.என்ன முடிவு வந்தாலும் ஒவ்வொருவராக பார்த்துக்கொள்ளலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த விடயம் என நான் கூறுவேன். 100 முதல் 200 உறுப்பினர்கள் கிடைத்தால், அவர்கள் திறமைசாலிகள் என்பது எனக்குத் தெரியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் (USAID) நிதியுதவியின் கீழ் 7 மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாய குடும்பங்களுக்கு தலா 15,000 கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும்  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கமைய இந்தக் கொடுப்பனவு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாதாந்தம் 41,500 ரூபாவிற்கும் குறைந்த வருமானம் பெரும் விவசாய குடும்பங்களுக்கு இந்த உதவி தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டில் நெல் விவசாயத்தில் ஈடுபடும் 12 இலட்சம் விவசாயிகளுக்கு 8 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய 10,000 – 20,000 ரூபா நிதியை விவசாயிகளுக்கு வழங்கும் அதேவேளை, அதன் முதற்கட்டத்தின் கீழ் 4 பில்லியன் ரூபாவினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )