
‘நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்’ கனத்தையிலிருந்து கொலையாளி பிரைனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி
தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்ய்யப்பட்ட பின்னர், கொலையாளி ஷாப்டரின் கைத்தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் கைத் தொலைபேசிக்கு செய்தி ஒன்றை கூறும் தகவலில் அனுப்பியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில், I’m waiting for, (நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக்குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்த தாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள தாக அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
கடந்த வியாழக்கிழமை (15ஆம் திகதி) தினேஸ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, மலர் வீதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேரடியாக பொரளை பொது மயானத்திற்கு சென்றதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜனசக்தியின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் பல வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த கொலை தொடர்பில் பல சந்தேகத்திற்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சி.ஐ.டி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது தகவல் சரிபார்க்கப்பட்டு வருகிறது, மேலும் விபரங்கள் சரிபார்த்த பிறகு, பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவரக்கூடும்” என்று கூறினார்.
தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட தினம், மலர் வீதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேரடியாக பொரளை பொது மயானத்திற்குள் பிரவேசித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஷாப்டர் பிற்பகல் 2.06 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் இந்த குற்றம் நடந்துள்ளதாகவும் சி.ஐ.டி. புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
தினேஷ் ஷாப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறிய நேரத்திலிருந்து, அவரது கார் நேரடியாகவே பொரளை பொது மயானத்திற்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கார் வந்த வீதிகளில் உள்ள சி.சி.ரி.வி பதிவுகளை ஆராய்ந்த போது இது தெரியவந்துள்ளது.
வழியில் எவராவது காரில் ஏறினார்களா அல்லது யாரையாவது சந்திக்கும் எதிர்பார்ப்புடன் மயானத்திற்கு சென்றாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மயானத்துக்குள் கார் வந்து நின்ற இடத்தை அவதானிக்கும் போது, பொரளை பொது மயானத்தை நன்கு புரிந்து கொண்ட ஒருவரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கனத்தை மயானத்துக்குள் பிரேத வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில் இவரது கார் எப்படி கனத்தை மயானத்துக்குள், அதுவும் விமானப்படையினருக்கென ஒதுக்கப்பட்ட தனியானதோர் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் நின்றது குறித்து தற்போது விசாரணைகள் நடைபெறுகின்றன.
மதியம் 2.30 மணிக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதால் சந்தேகம் எழுந்துள்ளது.பிரையன் தோமஸை கொலையில் சிக்க வைக்க முயற்சி நடந்ததா? அல்லது அவரை காப்பாற்ற முயற்சி நடந்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஷாப்டரை சந்திக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று தோமஸ் அந்தச் செய்திக்கு பதிலளித்திருந்தார். இரண்டு தொலைபேசிகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு கணனி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரையன் தோமஸின் வீட்டில் உள்ள பாதுகாப்பு கமெரா அமைப்பு கூட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொலையின் போது தோமஸ் வீட்டை விட்டு வெளியேறியதாகவோ அல்லது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவோ இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் 23 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவர்களில் தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொரளை மயானத்தின் பல ஊழியர்களும் உள்ளடங்குவதாக தல்துவா தெரிவித்தார். பாதுகாப்பு கமராக்கள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தல்துவ கூறினார்.
தினேஷ் ஷாப்டர் ஒரு தொழிலதிபர் மற்றும் பல்வேறு துறைகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த ஒருவர் என்பதால், விசாரணைகள் இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் என்று தல்துவ கூறினார்.
விஞ்ஞான சான்றுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்வதே பொலிஸாரின் நம்பிக்கை எனவும் தல்துவ மேலும் தெரிவித்தார்.
தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் முடியும் வரை, இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை குடும்பத்தினரிடம் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றதால், இன்று(நேற்று) முதல் அதற்கான பணிகளைத் தொடங்குவார்கள் என்று மற்றொரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
தினேஷ் ஷாப்டரின் மனைவி முதலில் பொலிஸாரிடம், தனது கணவர் அரை மணி நேரத்தில் திரும்பி வருவார் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார் என்று கூறினார்.
சரியாக அரை மணி நேரம் கடந்தும் கணவனுக்கு போன் செய்தும் அவர் பதிலளிக்காததால் மனமுடைந்து போனார். அவரது கணவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து அவரிடம் விசாரிக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைகளில், தினேஷ் ஷாப்டர் தனது மனைவிக்கு மேலதிகமாக தனது வர்த்தக பங்காளிக்கும் தொலைபேசி மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கியிருந்தமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரையன் தோமஸை சந்திக்கப் போவதாக தினேஷ் ஷாப்டர் தன்னிடம் கூறியதாக ஷாப்டரின் வணிகக் கூட்டாளியான ஒரு நிறுவன இயக்குனரும் பொலிஸாரிடம் தெரிவித்தார். தினேஷ் ஷாப்டரை முதலில் கண்டுபிடித்தவரும் இவரே.
அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் வந்த குறுஞ்செய்தியின் ஊடாக, தினேஷ் ஷாப்டரிடமிருந்து அத்தகைய சந்திப்பு குறித்த அழைப்பு வந்ததாக பிரையன் தோமஸ் அந்த குறுஞ்செய்தி குறித்து பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக்குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார்.
பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு கனத்தை மயானத்திலிருந்து தினேஷ் ஷாப்டரின் கைபேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

